Sunday, January 14, 2007

என் குடிலுக்கு வரவேற்கிறேன்.

அன்பு நண்பர்களே, எனது புதிய வலைக் குடிலில் உங்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ்ப் புத்தாண்டு முதல் எனது இயங்கு வலைத்தளமாக இந்த பதிவு விளங்கும். வகை பிரிக்கும் வசதி இங்கே இருப்பதினால் என் படைப்புகளும், கட்டுரைகளும் இனி இங்கே மட்டுமே பதிப்பிக்க படும். வழக்கம் போல திராவிட தமிழர்கள் வலைத்தளத்தில் எனது முந்தைய முத்துகுமரன் வலைப்பூ வாயிலாக இயங்குவேன் என தெரிவித்து கொள்கிறேன். வழக்கம் போல் வந்து வாசித்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

அன்புடன்
முத்துகுமரன்

உயிர்த்துளி


எனது முதல் கவிதைத் தொகுப்பு ''உயிர்த்துளி'' தமிழ் அலை வெளியீடாக இந்த தமிழர் திருநாள் அன்று வெளிவருகிறது. நீண்ட நாளய கனவு இன்று சாத்தியமாகியிருக்கிறது. எனது காதல் உணர்வுகளை கவிதைகளாக்கி உயிர்த்துளியாய் நீங்கள் பருகத் தந்திருக்கிறேன். வாசித்து உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவுக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
என்றும் அன்புடன்
முத்துகுமரன்